அரசு தேர்வுத்துறை சான்றிதழ் சரிபார்ப்பு பணி தேக்கம்

சென்னை: அரசு தேர்வுத்துறையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான விண்ணப்பங்கள், சரிபார்க்கப்படாமல் உள்ளன.

குவியும் சான்றிதழ்

தமிழக அரசின் எந்த அரசுத்துறை பணிகளாக இருந்தாலும், அவர்களின் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை, உண்மைத் தன்மை அறிவதற்காக, தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சான்றிதழ்களை, தேர்வுத்துறையில் உள்ள வேறொரு அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால், உண்மையான சான்றிதழ் என, தேர்வுத்துறை தெரிவிக்கும். இதில், பல போலியான சான்றிதழ்களும் பிடிபடுகின்றன.

பணியாளர் பற்றாக்குறை

முந்தைய ஆட்சியில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், 40 ஆயிரம் ஆசிரியர்களும்; முந்தைய ஆட்சியில் கடைசியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் படி, இந்த ஆட்சியில், 5,000 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சரிபார்ப்புக்காக இவர்களின் சான்றிதழ்கள், தேர்வுத்துறையில் தினமும் மலைபோல் குவிந்து வருகின்றன.

சரிபார்ப்பு பணிகளுக்காக, ஏற்கனவே, 5 பிரிவுகள் இயங்கி வந்தன. தற்போது, மேலும் ஒரு பிரிவு கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில், தலா, 6 பேருக்கு பதிலாக, 4 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பணிகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மட்டும், 90 இடங்கள் காலியாக இருக்கின்றன.

நியமன நடவடிக்கை

இதுகுறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1998ல் இருந்து நடந்த தேர்வுகளுக்கான சான்றிதழ்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணிகளில் சேர்பவர்கள், பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்களின் சான்றிதழ்களை தேடிப் பிடித்து, சரிபார்த்து வழங்குவது சிரமமாக உள்ளது. மேலும், சான்றிதழ்களை தொட்டாலே தூள், தூளாக ஒடிந்துவிடும் அளவிற்கு சேதம் அடைந்துள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே கிடக்கின்றன. தற்போது, மேலும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணியில் சேர்ந்து வருகின்றனர். இவர்களின் சான்றிதழ்கள் வரும்போது, பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவில், போதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாற்றாந்தாய் மனப்பான்மை

தேர்வுத்துறையை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசு பார்ப்பதாக, துறை அதிகாரிகள் கூறுகின்றனர். துறையில் உள்ள எந்தப் பிரச்னைகளையும், உயர் அதிகாரிகளோ, அமைச்சரோ கண்டுகொள்வது கிடையாது என்றும் புலம்புகின்றனர்.

மேலும், 200க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப, முந்தைய ஆட்சியில் கடைசிவரை நடவடிக்கை எடுக்கவில்லை; இந்த ஆட்சியிலும், இதுவரை நடவடிக்கை இல்லை.வருகிற அமைச்சர்களும், அதிகாரிகளும், "நடவடிக்கை எடுக்கப்படும்...&' என, கூறுகின்றனரே தவிர, துறையை சுத்தமாக கண்டுகொள்வதில்லை என்றும், ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழிக் கல்வி

பொள்ளாச்சி: "அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்க ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில், ஆங்கில வழிக் கல்வி துவங்கி, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என, துவக்கக் கல்வி இயக்குனரக இணை இயக்குனர் ராமராஜ் கூறினார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த புளியம்பட்டி பி.ஏ., இன்ஜினியரிங் கல்லூரி அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற துவக்கக் கல்வி இயக்குனரக இணை இயக்குனர் ராமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி மட்டுமின்றி வகுப்பறை, கழிப்பிடம், குடிநீர் ஆகிய வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஒரு சில பள்ளிகளுக்கு, போதுமான இடவசதி இல்லாததால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும்.

ஸ்மார்ட் கிளாஸ் உண்டு

பள்ளிகளுக்கு, டிவி, டிவிடி பிளேயர் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே ஸ்மார்ட் கிளாஸ் போன்ற கல்வி கற்றுத் தரப்படும். மலைப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து, தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில், நடப்பாண்டில் 56 ஆயிரத்து 143 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.

மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் வகையில், புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி, தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், தேர்ச்சி அடையும் ஆசிரியர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.

ஆரம்ப நிலையிலேயே ஆங்கிலம்

மேலும், 810 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் வேலை வாங்குவதைத் தவிர்க்கவும், பள்ளியிலுள்ள அடிப்படை வசதிகளை சரியான முறையில் பராமரிக்கவும், அந்தந்தப் பகுதி உதவி துவக்கக் கல்வி அலுவலர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில், ஆரம்ப நிலையில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வருவதற்காக நிபுணர் குழு அமைத்து ஆலோசனை நடத்தப்படுகிறது. விரைவில், நடுநிலைப் பிரிவு போன்று, ஆரம்ப நிலையிலேயே ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டு, தனியார் பள்ளிக்கு இணையாக சீருடை வழங்கப்படும்.

இதன்பொருட்டு, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதன்மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

இவ்வாறு, இணை இயக்குனர் ராமராஜ் கூறினார்.

சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களும் தகுதித்தேர்வு எழுத வேண்டும்

சென்னை: சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு சங்கத்தின் செயலர் முருகதாஸ் தாக்கல் செய்த மனுவின் விபரம்:

ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பாக, கடந்த ஆண்டு நவம்பரில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. கட்டாயக் கல்விபெறும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நியமனத்தில், பலருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் முடித்துவிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களும், தகுதித் தேர்வை எழுத வேண்டும் எனக் கூறப்படுகிறது.

எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு தகுதித் தேர்வை நிர்ணயிக்கும் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். மாநில அளவிலான வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில், எங்கள் சங்க உறுப்பினர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

சட்டத்திலிருந்து அரசு விலக முடியாது

மனுவை, நீதிபதி சந்துரு விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் திக்விஜய பாண்டியன் ஆஜரானார். மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்படுபவர்கள் யாரும், கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. இவர்கள் பிரச்சினையை, சங்கம் எப்படி எடுக்க முடியும் என தெளிவாக இல்லை. பதிவு செய்யப்பட்ட அமைப்புதான் சங்கம். பாதிக்கப்படுவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால் ஒழிய, இந்த விஷயங்களில் கோர்ட் முடிவெடுக்க முடியாது.

எனினும், குறிப்பிட்ட முறையிலான தேர்வை, பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டம் நிர்ணயிக்கும்போது, அந்த நடைமுறையில் இருந்து மாநில அரசு விலகிச் செல்ல வாய்ப்பில்லை. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வை, பல்கலைக்கழக மான்ய குழு நிர்ணயித்துள்ளது. இது செல்லும் என, சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள உத்தரவுகள், தமிழக அரசின் அரசாணையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை, தமிழக அரசு பின்பற்ற வேண்டும். மேலும், ஒரு பணியில் நியமிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்களை வடிகட்டுவது என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.

காளான் நிறுவனங்களால் தான் இந்த நிலை

மாநிலம் முழுவதும் காளான்கள் போல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள் முளைத்திருப்பதால், தேர்வு தரத்தை கொண்டு வருவது தவிர்க்க முடியாதது. பழைய கொள்கைப்படி, தேர்வு முறைப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், தங்களை வேறு விதமாக கருத வேண்டும் என, மனுதாரர் கோர முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

Get your google adsense

Get your google adsense

adsense account approval

adsense account approval adsense account approval